திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 9 நாட்களும் பல்வேறு வாகனத்தில் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. 10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 3.38 மணியளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு 5 மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அண்ணமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
Leave a Reply