விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தனது 63வது பிறந்தநாள் விழாவில், தூய்மை பணியாளர்களின் பணிநிரந்தரத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் சிறப்புரையாற்றி பாடல்களுடன் சிறப்பித்தார்.
திருமாவளவன் தனது உரையில், தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரமாகக் கொண்டுவருவது “குப்பை அள்ளுபவர் குப்பைத் தானே எடுக்க வேண்டும்” என்ற கருத்துக்கு வலுவூட்டுவதாக கூறினார். அதே சமயம், குப்பைத் தொழிலிலிருந்து அந்த பணியாளர்கள் மீண்டும் நிறுத்தப்பட வேண்டும் என்றார். அதிகாரம் என்பது சட்டபூர்வ உரிமை மட்டுமல்ல, ஒரு சொத்தும் ஆகும் எனவும், இவர்களது கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.



Leave a Reply