, , ,

திருமலையில் ரத ஸப்தமி- பாதுகாப்பு பணியில் 1,250 போலீசார்

rathasaptami
Spread the love

திருப்பதி திருமலையில் ரத ஸப்தமி விழாவையொட்டி 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், வரும் பிப்ரவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு  2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.​ சர்வ தரிசன டோக்கன்களும் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வழங்கப்படமாட்டாது. இதேபோல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் பெறமாட்டாது. பாதுகாப்பு பணிக்கு 1,000 தேவஸ்தான கண்காணிப்பு படையினர், 1,250 காவல்துறையினர்  நியமனம் செய்யப்படுகின்றனர்.