திருப்பூரில் ராம்ராஜ் காட்டன், ‘ராம்ராஜ் ஒயிட் வாரியர்ஸ் மாரத்தான் 2026’ என்னும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
ராம்ராஜ் காட்டன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக மட்டுமே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
உடல் நலம், ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பூர், நல்லூர் சரக துணை போலீஸ் சூப்பிரெண்ட் தையல் நாயகி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடி யசைத்து துவக்கி வைத்தார்.
வஞ்சிப்பாளையம் சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தானில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் உற்சாகமாகப் கலந்து கொண்டனர்.
போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. இதில் 8 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 கி.மீ ஓட்டம், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 8 கி.மீ ஓட்டம் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8 கி.மீ ஓட்டம் என நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பற்றி ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், “ராம்ராஜ் ஒயிட் வாரியர்ஸ் மாரத்தான் என்பது வெறும் ஓட்டப்பந்தயம் மட்டுமல்ல; இது ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் நம்மை இணைக்கும் சமூக மதிப்புகளின் கொண்டாட்டமாகும்.
எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். குடும்பங்கள் ஒன்றாக இதில் பங்கேற்கும் போது, அவர்களுக்குள் உறவு பலப்படுகிறது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அது வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான மற்றும் ஊக்கமான மனிதர்களால்தான் ஒரு சிறந்த நிறுவனத்தை உருவாக்க முடியும் என்று பேசினார்.
அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை நிறைவு செய்த அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
திருப்பூரில் ராம்ராஜ் ஒயிட் வாரியர்ஸ் மாரத்தான்



Leave a Reply