திருப்பதி ஏழுமலையான் கோயிலில், துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை வழிபாடு செய்தார்.
இதற்கிடையில், ரேணிகுண்டா விமான நிலையத்தில் அவரை சந்தித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, அவருக்கு சால்வை அணிவித்து, வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று, அவருடன் கலந்துரையாடினர்.



Leave a Reply