வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது.
இதனையடுத்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
Leave a Reply