திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கம், போதைப்பொருள், அரிய வகை வன விலங்குகள், வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வரும் நிலையில், அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த 3 பேரை சோதனை செய்தனர். சோதனையில் அதில் பயணம் செய்த 3 பேரும் தங்களது உடைமைகளில் தங்கத்தை கியரில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.64 லட்சத்து 2000 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 3 பயணிகளை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply