திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் அறிவிப்பு…….
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனை அடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் அறிவிப்பு…….

Leave a Reply