வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து த.வெ.க இயங்கி வருகிறது. இதற்காக, முழு மூச்சில் அந்த கட்சி களம் இறங்கியுள்ளது. கூட்டணிக்கான பேரங்களையும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவர திட்டங்களை போட்டு வருகிறது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நேற்று இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். இப்படியாக த.வெ.க கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இதுவரை நடந்த எந்த கூட்டத்திலும் திமுக என்று நேரடியாக குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசியதில்லை. இப்போது, மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், முதன் முறையாக திமுக என்று பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,’ எல்லாருக்கும் வணக்கம். தமிழ்நாடு முழுக்கவுள்ள அம்மா, அக்கா, தங்கச்சி அனைவருக்கும் இன்று என்னால் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்களுக்கு எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். இப்போ, சந்தோசமா? எங்கே சந்தோசம் இருக்க முடிகிறது என்று கேட்கிறீர்களா? ஆமா… பாதுகாப்பு இல்லாம எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? இன்செக்யூரிட்டியா இருக்கும் போது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? vijay
நீங்க நான் எல்லாம் சேர்ந்துதானே இந்த திமுக அரசை தேர்வு செய்தோம். 2026 ஆம் ஆண்டு நீங்க எல்லாம் சேர்ந்து இல்லை .. நாம எல்லாரும் சேர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இந்த அரசை மாற்றுவோம். எல்லா சூழலிலும் உங்களுக்கு மகனா, அண்ணணாக தோழனாக உங்களோட சேர்ந்து நான் நிற்பேன். ‘
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply