திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்றிரவு கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. எந்த ஊரில் எந்தப் பெண் பாதிக்கப்படுகிறாள் என்ற அச்சத்துடனே மக்கள் வாழ்கிறார்கள். வீட்டில் இருந்தாலும், வெளியில் சென்றாலும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என கூறும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர். இவ்வாறான அவலங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவலையின்றி சுற்றிப் பயணிக்கிறார். இது தான் நல்லாட்சியின் லட்சணமா?” என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.



Leave a Reply