,

திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை – கோவையில் கனிமொழி பிரச்சாரம்

kanimozhi
Spread the love

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். கணக்கு தப்பாக போய் கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்றார். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார். திமுக வெற்றி அசைக்க முடியாத உண்மை. .

ஒவ்வொரு இடத்திலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது வாழக்கூடாது என்ற நிலையை பாஜக ஏற்படுத்தி இருக்கின்றனர் என்றார். தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
நம் பிள்ளைகள் வசதியாக மரியாதையாக நல்ல வேலை கிடைத்து அடிப்படை வசதியுடன் வாழ வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ளவர்களின் கனவு எனக்கூறிய அவர்
மணிப்பூரில் உள்ளவர்களின் கனவு தங்கள் பிள்ளைகளை உயிரோடு பார்ப்போமா என்பதாக இருக்கிறது.

என்ன தவறு செய்தாலும் எல்லாத்தையும் அவர்கள் பாதுகாப்பார்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் பாஜகவினர் மிரட்டுவார்கள்.  சேலத்தில் இருந்த இரண்டு விவசாயிகள் பிஜேபிக்கு பிரமுகருக்கு எதிராக செயல்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.தேர்தல் பத்திரத்தை கண்டுபிடித்து அதனை சட்டம் பூர்வமாக்கி, முக்கால்வாசி தேர்தல் பத்திரம் பாஜகவினருக்கு தந்திருக்கின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் ரைடு விட்டு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கின்றனர்.

தேர்தல் பத்திரம் ஒரு சட்டபூர்வமான ஊழல். இதில் பாஜகவினர் ஊழல் பற்றி பேசி வருகின்றனர். டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வரை சிறையில் வைத்திருக்கின்றனர்.   விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் இவர்கள் அமல்படுத்திருக்கின்றனர்

திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை. பிரதமர் முன்பாக கை கட்டி நிற்க வேண்டும் என்பதனால் இதுவரை பேசவில்லை. 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி சொன்னார் வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் என்று சொல்கின்றார்.  68,700 கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் ரத்து செய்து இருக்கின்றார்கள். விமான நிலைய விரிவாக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதனை செய்ய மறுக்கின்றார்கள் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு பத்து நாட்களில் ஏர்போர்ட்டை தருகின்றார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி 10 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத்துவப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலானோர் இந்து பெண்களே நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கக்கூடிய அந்த திட்டத்தில் பயன்படக்கூடியவர்கள் பெரும்பான்மையாக இருப்பவர்கள் இந்துக்கள் படிப்பவர்களுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தை தந்திருக்கின்றோம் கல்லூரி படிக்கும் இளைஞர்களுக்கு தமிழ் முதல்வன் திட்டம் ததரப்பட்டிருக்கின்றது ஆனால் பாஜக என்ன செய்திருக்கின்றார்கள்? நம்ம வீட்டுப் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காக கல்வி கொள்கையை கொண்டு வந்து நுழைவுத் தேர்வு வைத்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் அடிமையாக வைத்திருந்தது போல மீண்டும் நம்மளை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெரும்பான்மை மக்களுக்கு பெரும்பாலும் எதிராக இருப்பவர்கள் பாஜகவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே வருகின்ற தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என கேட்டுகொண்டார்.