,

திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை -முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

admk
Spread the love

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவை இதயதெய்வம் மாளிகையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட கழக, பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோ ஆப்டெக்ஸ் வாரியத் தலைவரும் அவைத் தலைவருமான ஏ.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர்கள்பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ. தாமோதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி பி.கந்தசாமி, டி கே.அமுல் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரை ஆற்றுகையில், “நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க பூத் கமிட்டி உறுப்பினர்கள், மகளிர் குழு, பாசறை குழுகளை  நியமித்து பணியாற்றி வருகின்றோம். பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, ஆலோசனைக்கிணங்க அனைவரும் பணியாற்றினாலே போதும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
திமுகஆட்சியை எதிர்க்கும் வகையில் அதிமுகவில் தான் அனைத்து தரப்பினரும்  இணைந்து வருகிறார்கள்.தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டனர். நல்லாட்சியை அதிமுகவில் மட்டுமே கொடுக்க முடியும் என முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வேட்பாளராக அறிவிக்கிறார்களோ அவர்களது வெற்றிக்காக நாம் சுழன்று பணியாற்ற வேண்டும்.
நமக்கு எதிரி திமுக. திமுக ஆட்சியில் நமது தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். விடியா ஆட்சியின் அவலங்கள் குறித்து ஒரு பதிவு போட்டாலே உடனே வழக்கு போடும் அராஜக ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது இதுவரை மக்களுக்கான எந்த திட்டங்களையும்  திமுக தரவில்லை.
அதிமுகவிற்கு முழுமை யான வாக்குகளை பதிவு செய்ய மக்கள் தயாராக விட்டனர். பூத் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்றினால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்றத் தேர்தலாகட்டும், உள்ளாட்சி தேர்தல் ஆகட்டும் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
அதிமுக ஆட்சியில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கிய திட்டங்களை எல்லாம் தி.மு.க ஆட்சி நிறுத்திவிட்டது. தமிழகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என மக்களை பாதிக்கும் வகையில் அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டார்கள். இதனை நாம் தெரு பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். துண்டு பிரசுரங்கள், நோட்டீஸ்கள் மூலமும் திமுக ஆட்சியின் அவலங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.  திமுகவிற்கு திரும்பவும் வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. இது முக்கியமான தேர்தல். அதிமுகவிற்கு ஓட்டு போடுவதற்கு மக்கள் தயாராக உள்ளனர். எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். “ என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, செல்வி பத்மினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி வாசு, எம்கே.முத்துகருப்பண்ணசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.சந்திரசேகர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன்,  மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கேபி.துரைசாமி, கட்டுமான சங்க மாநில பொருளாளர் கே.வி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.சுப்பிரமணியம்,  சுசிலா மாணிக்கராஜ் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.