தவெகவினர் மீது வழக்கு பதிவு

vijay
Spread the love
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொது கமிட்டி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் கோவை விமான நிலையம் வந்த போது ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இங்கு திரண்டனர் மேலும் இரு சக்கர வாகனங்களில் கார்களிலும் அதிவேகமாக விஜயின் ஆரம்பத்தில் பின் தொடர்ந்து அவினாசி சாலையில் சென்றனர்

இந்த நிலையில் உரிய அனுமதியின்றி பொது இடத்தில் அதிகமானோர் ஒன்று கூடுதல் மற்றும் பொது போக்குவரத்து இடையூறு விளைவித்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ் தவெக மாவட்ட செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்ட பலர் மீது பீளமேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்