முதலில் இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் திட்டத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சுந்தர்.சி, ‘மூக்குத்தி அம்மன்–2’ படத்தின் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரஜினியின் இந்த முக்கிய படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்திருந்தது.
அதன்படி, ‘டான்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் ‘தலைவர் 173’ படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகமும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்த படம், இளம் தலைமுறை இயக்குநரின் பார்வையில் எவ்வாறு உருவாகும் என்ற ஆவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



Leave a Reply