, , ,

தரமற்ற முறையில் செம்மொழி பூங்கா பணிகள் : தலைமை செயலாளருக்கு கவுன்சிலர் பிரபாகரன் கடிதம்

Peravai prabhakaran
Spread the love

 

கோவை மாமன்ற 47வது வார்டு உறுப்பினர் பிரபாகரன் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

தற்சமயம் கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 167. 25 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதத்தில் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிகிறது. ஆனால், பூங்கா பணிகள் அவசரகதியில் தரமின்றி கட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணிகள் தரமான முறையில் நடைபெறுகிறதா என்று தமிழக அரசு தலைமை செயலர் மூலம் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டுகிறேன். தற்சமயம் பணி முடிவடைவதற்கு முன்னரே, பூங்காவுக்கு வரும் மக்களிடத்தில் பலவிதமான கட்டணம் வசூலிக்க கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி நடந்த கோவை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். அதோடு, வியாபார நோக்குடன் கட்டணம் அதிகமாக நிர்ணயித்துள்ளனர். எனவே, இந்த கட்டணத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.