கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுவாமிநாதன் கூறும் பொழுது, “கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்எல்ஆர் அரங்கில், உயர்கல்வி சிறந்தோங்க எனும் தலைப்பில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது, 20வது ஆண்டு மாநில மாநாடாக நடைபெறும். இதனை, தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்க உள்ளார்.
நிகழ்வின் தொடக்கமாக உயர்கல்வி குறித்த கருத்தரங்கமும், இரண்டாம் கட்டமாக வாழ்த்தரங்கமும், பேராசிரியர் நரசிங்கம் அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கும் விழாவும், நடைபெற உள்ளது. இதில், மாநாட்டின் தலைப்பை இச்சங்கத்தின் பொதுசெயலாளர் மனோகரன் உயர்கல்வி சிறந்தோங்க எனும் மாநாட்டை துவக்கி வைக்க உள்ளது. இந்த மாநாட்டில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் உள்ள இடர்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை என்பது மத்திய அரசின் காவிமயத்தை பிரதிபலிக்கின்றது. இதனை மாநில அரசு பின்பற்றுவதால் மாணவர்களின் எதிர்கால நிலை குறித்து தலைசிறந்த பேராசிரியர்களுடன் விவாதம் நடத்தும் கருத்தரங்கமாக நடைபெற உள்ளது,” என்றார்,
Leave a Reply