தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டர் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் நடைபெற்றது.
தொழில் துவங்கும் முனைப்பில் இருக்கும் பெண்களுக்கும் ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வரும் பெண்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வரும் Women Entrepreneur Network (WEN) கடந்த 10 பத்து ஆண்டுகளாக கேரளாவில் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் 80 பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவி வரும் Women Entrepreneur Network (WEN) முதல்முறையாக தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் தனது புதிய சேப்டரை துவங்கியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய WEN அமைப்பைச் சேர்ந்த ஹரிப்பிரியா கூறுகையில், கோவையில் Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டரை துவங்கியுள்ளதாகவும் இதுவரை ஏராளமான பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் செய்ய விரும்புபவர்கள் இதில் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முன்னேற்றம் குறித்து பயிற்சி வழங்கப்படுவதாகவும் கருத்தரங்கங்கள் நடத்தப்படுவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டர்களை துவங்க இருப்பதாகவும் கூறினார்.
Leave a Reply