2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கு 1240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 09.05.2025 முதல் இணையதள வாயிலாக http://tnau.ucanapply.com மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 24.06.2025 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணாக்கர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 24.06.2025க்கு முன்பு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email) : ugadmissions@tnau.ac.in மூலமாகவும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம்.
Leave a Reply