, , ,

தமிழ்நாடு முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் – தமிழக அரசு அறிவிப்பு….

amutham
Spread the love

தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.  டிபார்ட்மெண்ட் கடைகளைப் போல  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்கே எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த கடைகள் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதற்கட்டமாக கோபாலபுரத்தில்  ஏற்கனவே இருந்த அமுதம் அங்காடி அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி அமுதம் அங்காடியில் எந்தெந்த பொருள்கள் எல்லாம் அதிகம் விற்பனை ஆகின்றன என்பது கணக்கெடுக்கப்பட்டு, அந்த பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டன.   அது மட்டுமல்லாது, புதிதாக சில மளிகை பொருட்களும் அங்காடி மூலமாக வெளிச்சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தற்போது 100 புதிய அமுதம் அங்காடிகளை தமிழகம் முழுவதும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20 கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.