தமிழ்நாடு நோக்கி வீசும் பலவீனமான காற்று: 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Spread the love

தமிழ்நாட்டை நோக்கி மேற்கு திசையிலிருந்து வீசும் பலவீனமான காற்று மற்றும் அதனுடன் ஏற்படும் வேகமாறுபாடுகளால், பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை நகரில் இன்று ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கடல் பேரழிவுகள் ஏற்பட்டற்கான வாய்ப்பு உள்ளதனால், மீனவர்கள் அந்தப்பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழையுடனும், கடலோர பகுதிகளில் ஏற்படும் அபாய சூழ்நிலைகளுடனும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்