கோவை





, ஜன.28
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம் நேஷனல் மாடல் பள்ளி அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. மோகன் சந்தர் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பி.டி அரசகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளின் தரங்களை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகளை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளை பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் டாக்டர் எல். சிங், செயலாளர் சிவ சதீஷ்குமார், பொருளாளர் பாரதி, மண்டலச் செயலாளர் குப்புராஜ், மாவட்ட ஆலோசகர் அருணா துரைராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி 150 க்கு மேற்பட்ட தனியார் பள்ளி தாளாளர்கள், பள்ளி முதல்வர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply