மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருவதால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை தமிழ்நாட்டில், செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். ஆனால், அதற்கான நிதியை வழங்க மறுத்து வருகிறது. இந்த நிதியின் ஒரு பகுதியான ரூ.573 கோடியை, கடந்த ஜூன் மாதமே மத்தியஅரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்க வில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை எனறு கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி நிறுத்தம்….! – தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் முடிவு…

Leave a Reply