தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் இரண்டு பெரும் தலைவர்களோடு பயணித்த அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். தாம் இருந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். எளிமை, அன்பு, பண்பு ஆகியவற்றால் அனைவரிடமும் மரியாதை பெற்ற மூத்த அரசியல் தலைவர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இன்று முதல் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என விஜய் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவில், செங்கோட்டையன் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். கழகத்தின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, அமைப்பின் வளர்ச்சி திசையை வழிநடத்துவதில் அவர் முக்கிய பங்காற்றுவார் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.



Leave a Reply