, , , , , , , ,

தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிப்பு??

Spread the love
தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிப்பு??

தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்க்ரப் டைபஸ் என்கிற ஒருவகை பாக்டீரியா தொற்று தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

தினமும் 10 முதல் 20 பேர் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் இந்த தொற்றின் முக்கிய அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.