தமிழ்நாடு அரசு 2025 அக்டோபரில் வெளியிட்ட புதிய பொது கட்டட விதிமுறைகள் திருத்தத்தின் படி, 3,300 சதுரஅடி வரை உள்ள தனி வீடுகளில் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்பு, கார் நிறுத்துமிடம் தொடர்பான விதிகள் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மட்டுமே பொருந்தியிருந்தன. புதிய விதிகள் தற்போது தனி வீடுகளுக்கும் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் நகர்ப்புற சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க அரசு முயற்சி மேற்கொள்கிறது.
திட்ட அனுமதி (Building Plan Approval) பெறும் போது, வாகன நிறுத்துமிட இடத்தை வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்; இல்லையெனில் அனுமதி வழங்கப்படாது.
இந்த புதிய விதிகள் பொதுப் போக்குவரத்து வசதிகளை பாதுகாக்கவும், சாலை மேல்நிறுத்தத்தைத் தடுக்கவும் நோக்கமாக கொண்டவை.



Leave a Reply