, , ,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இ.பி.எஸ்.. பேட்டி

EPS
Spread the love

துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை, அவர் ஒரு பச்சோந்தி.நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். நான் கிளை செயலாளராக இருந்து முதல்வராக வந்தவன். கட்சியில் படிப்படியாக ஒவ்வொரு மட்டத்தில் இருந்து வந்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அண்ணாமலை நியமிக்கப்பட்டவர். பேசுவதற்கு முன் அண்ணாமலை கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மது குடிப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த போது 5 சட்டப்பேரவைத் தேர்தல்களை அதிமுக புறக்கணித்துள்ளது. அதே போன்று தான் தற்போது விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் புறக்கணித்துள்ளோம். வாக்காளர்களை கொடுமைப்படுத்தி தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக யாரையும் கட்டாயப்படுத்தி வாக்களிக்க வேண்டும் என கூறக்கூடாது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது. அவர் சுயநலம் பிடித்தவர். அவரை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் மட்டும் தான் இடைத்தேர்தலை புறக்கணித்தோமா.. அப்போ திமுக புறக்கணிக்கவில்லையா..? திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயகம் செத்துரும். மோடியிடம் அருகில் அமர்ந்ததற்கே அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. எங்கள் தலைவர்களை பற்றி தவறாக பேசினால் நாங்கள் சும்மா இருப்போமா.? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகிற சூழல் இல்லை. ஆட்டை வெட்டுவது போல, மனித உயிர்களை சர்வ சாதாரணமாக வெட்டி சாய்க்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இ.பி.எஸ்.. பேட்டி