தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
18வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் வெளியிட்டார்.
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார். நாடு முழுவதும் 96.8 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதனுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
Leave a Reply