சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியின் தோல்விக்கு தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR)தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், “பீகாரில் SIR விளையாடிய விளையாட்டு இனி மேற்கு வங்கம், தமிழ்நாடு, உ.பி. மற்றும் பிற இடங்களில் சாத்தியப்படாது ஏனென்றால், இந்தத் தேர்தல் சதி வெளிப்பட்டுவிட்டது. இனி அவர்கள் இந்த விளையாட்டை ஆட நாம் அனுமதிக்கக் கூடாது.சிசிடிவி போல எங்களது பிபிடிவி (சமாஜ்வாதி கட்சியின் அரசியல் கண்காணிப்பு அமைப்பு) விழிப்புடன் இருந்து பாஜகவின் நோக்கம் நிறைவேறாமல் தடுக்கும். பாஜக ஒரு கட்சி அல்ல, மோசடி”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Leave a Reply