,

தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும் – பிரதமர் மோடி பேட்டி

modi
Spread the love

தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக வருகிற மக்களவை தேர்தல் அமையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவருக்கு நீலகிரி கைத்தறி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு என் மீது கோபம். இந்தியா கூட்டணி தமிழகத்தை கைப்பற்றிவிட்டால் வளர்ச்சி இருக்காது. அவர்கள் வளர்ச்சியை அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் பொய் பேசியவர்களின் ஊழல் வெளியே வந்துள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு தந்ததை விட பாஜக அரசு அதிகளவில் தந்துள்ளது.