அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மதியம் 2:30 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை குட்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு 22.01.2024 அரை நாள் விடுமுறை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை பிற்பகல் வரை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply