டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது இன்று காலை சுவேதா லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தாக்குதல் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, பொதுமக்கள் குறைகளை கேட்கும் வாராந்திர நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ரேகா குப்தா, திடீரென ஒருவரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்கிய நபர் சத்தமாகக் கத்திக்கொண்டு வந்ததும், எதிர்பாராத வகையில் முதல்வரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் உடனடியாக போலீசார் செயலில் இறங்கி தாக்கிய நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், தாக்குதலுக்கான காரணம் தற்போது வரை உறுதியாகத் தெரியவில்லை.
இந்த சம்பவம் முதல்வர் இல்லத்தின் பாதுகாப்பில் உள்ள பெரிய பிழையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதனை அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா இந்த தாக்குதலைக் கண்டித்து, “முன்னெச்சரிக்கையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கவலைக்கிடம். இது அரசு அமைப்புகள் செயல்படுவதில் தோல்வியை காட்டுகிறது,” என கூறியுள்ளார்.



Leave a Reply