,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

Arvind Kejriwal
Spread the love

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால், போலீசார் மற்றும்  பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.