தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாகவும், அவர்கள் கடனில் சிக்கி வாழ்க்கை சிரமத்தை எதிர்நோக்கும் சூழலில் உள்ளதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்கும் வகையில் சிறப்பு நிவாரண திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,” எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதை நினைவுபடுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Leave a Reply