அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி சுங்கவரி காரணமாக, தமிழகத்தின் முக்கிய தொழில் துறைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, இந்த நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே விதித்த 25% வரி, தற்போது 50% ஆக உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டின் ஜவுளி, இயந்திரங்கள், நகைகள், இரசாயனங்கள், ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட பல துறைகள் பண இழப்பு, உற்பத்தி மந்தம், வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள முக்கியமான புள்ளிவிவரங்கள்:
-
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தில் தமிழ்நாட்டின் பங்கு 31%
-
தமிழ்நாட்டில் ஜவுளித் துறை 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
-
50% வரி நிலுவையில், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
-
2024–25 இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு பங்கு – 28%
இக்கட்டான சூழ்நிலையில், மாநில தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:
-
முழு ஜவுளி சங்கிலிக்கு 5% ஜிஎஸ்டி வரி
-
பருத்தி இறக்குமதி வரியில் விலக்கு
-
அசலைத் திருப்பிச் செலுத்துதல் 2 ஆண்டுகள் ஒத்திவைப்பு
-
ECLGS திட்டத்தின் கீழ் 30% கடன்களுக்கு 5% வட்டி மானியம்
-
RoDTEP நன்மைகள் 5% வரை உயர்த்தல்
-
FTA மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துதல்
-
சிறப்பு நிதி நிவாரணத் திட்டம் – பிரேசில் மாதிரி மாடல்
முதல்வர் தனது கடிதத்தின் முடிவில், “தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை இதுவரை காணாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். தேவையான நடவடிக்கைகளில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளது,” என தெரிவித்துள்ளார்.



Leave a Reply