வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடன் உள்ள வர்த்தக சர்ச்சையைத் தீர்க்கும் முயற்சியாக, சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதனால், உலக வர்த்தகத்தில் மீண்டும் டிரம்ப் ஒரு பேக் அடித்தார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவிற்கு 50% வரி விதித்து அதிர்ச்சி அளித்த டிரம்ப், அதே நிலையை சீனாவிடம் பின்பற்றவில்லை என்பது சர்வதேச அளவில் எதிர்வினையை உருவாக்கியுள்ளது.
இரட்டை நிலைமையா?
இந்தியா மற்றும் சீனா இருவரும் ரஷ்யா இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இந்தியாவைத் திறமையாக குறை கூறிய டிரம்ப், சீனாவை விமர்சிக்க தவிர்க்கிறார். சீனாவுடன் கடந்த மே மாதம் தொடங்கிய வரி விவகாரம், ஜெனீவா மற்றும் ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தைகள் வழியாக மாறுபட்ட நிலையில், தற்போது வரி விதிப்பை மீண்டும் 90 நாட்கள் ஒத்திவைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
திடீரென மாற்றம் – காரணம் என்ன?
டிரம்ப் சீனாவுடன் அமைதியாக நடந்து கொள்வதற்குப் பின்னணி குறித்து Rare Earth Metals முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சிப் உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பத்துறைகள் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிய வகை கனிமங்கள்மீது தாங்கி நிற்கின்றன. கடந்த வரி நடவடிக்கைகளின்போது சீனா இந்த கனிமங்களை ஏற்றுமதி செய்ய தடையாக நடந்துகொண்டது. இது அமெரிக்காவை பெரிதும் பாதித்திருந்தது.
தடை மீண்டும் ஏற்பட்டால் அமெரிக்காவின் தொழில்துறை மீது தாக்கம் ஏற்படும் என்பதால், டிரம்ப் சீனாவுடன் நேரடியான முரண்பாடுகளைத் தவிர்க்க முயல்கிறார் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
முழுக்க முழுக்க அரசியல் தீர்வுகளால் ஆன வரி நடவடிக்கைகள், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது சீனாவுடன் நடைபெறும் இத்தகைய வியூகம், வர்த்தக ஒப்பந்தங்களை விட அரசியல் அழுத்தமே அதிகமாக உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.



Leave a Reply