ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில் குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதற்கு மே இறுதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
கணினி வழியில் கொள்குறித் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply