,

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா……மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது….

madhurai
Spread the love

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
சிவாஜி ராஜன் ரெட்டியார் பவுண் டேஷன் மற்றும் ரெட்டியார் பேரமை ப்பு சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழாயொட்டி, இலவச நோட்புக் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, சர்வோ தயா சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் திருப்பதி, பாப்புரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலாஜி வரவேற்றார். மதுரை மாவட்டம் இளைஞர் அணி தலைவர் சுஜித் , மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். இதில், மாயாவதாரன், பாஸ்கரன், ரித்திக்
ரோஷன், உட்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில், அருண்குமார் நன்றி கூறினார்.