கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கொங்கு குடும்ப விழா மற்றும் கொங்கு சமுதாயத்தில் விவசாயம், கல்வி, மருத்துவம், தொழில்துறை, பொதுச்சேவை உள்ளிட்ட துறைகளில் சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு கொங்கு சாதனை விருதுகள் வழங்கும் விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் ஆகவும் டாக்டர் என்.ஜி.பி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய சேவைகளை ஆற்றிவரும் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமியின் சேவையை பாராட்டி கொங்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கோவை கே.பி.ஆர் நிறுவனங்கள் மற்றும் கே.பி.ஆர் கல்வி குழுமங்களின் தலைவர் கே பி ராமசாமி கொங்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி தனது ஏற்புரையில், இதுபோன்ற விருதுகள் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளில் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிப்பதாக் கூறினார். தம்மை இவ்விருதுக்கு தேர்வு செய்த கோவை கொங்கு நண்பர்கள் சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply