, , , , , ,

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் 2024 போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

Spread the love

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த
மாணவர்கள் குழு. கோயம்புத்தூரில் உள்ள ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான்
2024 என்ற பெருமைக்குரிய போட்டியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப்
பெற்றுள்ளது. மைசூரில் பல்வேறு அரசு அமைப்புகளுடன் இணைந்து கல்வி
அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்புப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த
தேசிய அளவிலான போட்டி, மாணவர்களுக்கு தொழில்நுட்ப மேம்பாடுகளில்
ஏற்படும் சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
இணைய பாதுகாப்பு மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர்
முனைவர். வெ. சோபனா அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டாம்
ஆண்டு மாணவர் ஆர். அத்வைத் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இந்த மாணவர்கள் அணியானது இந்தியாவில் அதிகரித்து பெண்களுக்கு
எதிரான பாலியல் சிக்கல்களை எதிர்கொள்ள புதுமையான தீர்வு ஒன்றை
உருவாக்கினர். குறிப்பாக நவீன உத்திகள் மூலம் ஆண்களுக்கு இடையே
புரிந்துணர்வுத் தன்மையை வளர்ப்பதும் பாதிப்புக்கு உள்ளடக்கப்படும்பெண்களை செயலி மூலம் இயல்பு வாழ்க்கை நிலைக்கு மீட்டெடுப்பதும்

இதன் நோக்கமாகும். நிபுணர் குழுவால் கடுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு,
ஆர். அத்வைத் அவர்களின் அணிக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசும் பதக்கங்கள்
மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த சாதனை குறித்து டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி
நிர்வாகத்தினர், கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர், முதல்வர்,
கல்வித்துறைத் தலைவர் மற்றும் ஊழியர்கள் தங்கள் பெருமிதத்தையும்,மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.