, , , , , , , , , , , , , ,

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா

Spread the love

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா..

டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில்  24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என் ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பிகலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்லியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார்.

 

பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர்: இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வி.பாரதிஹரிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார் டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார். கோவை மருத்துவ மையத்தின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் அருண் என்.பழனிசாமி இவ்விழாவில் கலந்து கொண்டார். டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஸ்வரன் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி உரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி, டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்விசார் இயக்குநர் முனைவர் கு.இராமமூர்த்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை 1903, முதுகலை 390, முனைவர் பட்டம் 12. மொத்தமாக 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர், தேசிய கீதத்துடன் இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.