, , , , , , , , , ,

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா – அறிக்கை

Spread the love

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில்
13-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.
அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், டாக்டர்.ஆர்.வி. கல்லூரியின்
நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலருமான திரு.சுந்தர் அவர்கள்
தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்
சி.என்.ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்று கல்லூரி ஆண்டறிக்கை
வாசித்தார். போர்டு இயக்குநர் மற்றும் குளோபல் சி.எக்ஸ்.ஓ., ஜி.சி.சி.
நிபுணர், டிஜிட்டல் மாற்ற தலைவர், ஸ்டார்ட் அப் வழிகாட்டியுமான
திரு.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் பேசிய
உரையில்,"கல்வி பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு தம்
வாழ்க்கையில் இன்று ஒரு சிறப்பான நாள். இன்றைய நாள் மாணவர்களின்
வாழ்க்கையை தீர்மானிக்கும் அற்புதமான நாள். பட்டம் பெற்ற
மாணவர்கள் தொழில் துறையிலோ, வர்த்தகத் துறையிலோ சிறந்த தொழில்
முனைவோராக சாதிக்க முடியும். படிப்பில் பின் தங்கிய மாணவனும் தம்
உயர்ந்த சிந்தனைகளால் வாழ்க்கையில் மேன்மை அடையலாம். இன்று
நீங்கள் விதைக்கும் விதைதான் நாளை வளர்ந்து ஆலமரமாகும். உங்கள்
வாழ்க்கை உங்கள் கையில். உங்கள் பெற்றோர்களின் தியாகமே உங்களின்
உயர்வு. உங்களின் அடுத்த தலைமுறையை மேன்மேலும் உயர்த்துவது
உங்களின் கடமை. நம் இந்திய அரசாங்கம் நாம் கல்வி கற்கும் முறையில்
நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இணைய வழிகற்றலும்
இணைய வழி தேர்வும் அதில் குறிப்பிடத்தக்கவை. டிஜிட்டல் மயமான
இவ்வுலகில் மாணவர்கள் தனக்கான தனித்திறமைகளை வளர்த்துக்
கொண்டு முன்னேற வேண்டும்" என்று மாணவர்களுக்கு பல்வேறு
கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து 2020-2023 மற்றும் 2021-2023 ஆம் கல்வியாண்டில்
வணிகவியல், கணினி அறிவியல், உயிர் தொழில்நுட்பவியல், கணிதவியல்
துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயின்று முடித்த
164 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்ற
மாணவர்களை கல்லூரியின் இணை நிர்வாக அறங்காவலர் திருமதி.சபிதா
ராமகிருஷ்ணன் அவர்கள், அறங்காவலர் திரு.கோபாலகிருஷ்ணன்
அவர்கள், அறங்காவலர் திருமதி. பிரியங்கா சுந்தர் அவர்கள் பாராட்டி
வாழ்த்தினர். இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர்கள், அனைத்து
துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் நிர்வாக மேலாளர் திரு.
மனோகரன் அவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.