சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆனைகட்டி அருகே 20 நாட்கள் தங்கி, படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த ரஜினி, தற்போது மீண்டும் கோவையில் நடிக்க வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கும் கமலுக்கும் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் கதை, கதாபாத்திரம் சரியாக அமைந்தால் தான் சாத்தியம். இதுவரை அதற்கான சரியான இயக்குனர் கிடைக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் இறங்கிய ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஜெய்லர் 2 படப்பிடிப்பு அடுத்த 6 நாட்கள் நடைபெறும். படம் ஜூன் மாதத்திற்கு மேல் வெளியாகும்,” என்று கூறினார்.
சினிமா கலைஞர்களின் கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு, “No Comments” எனச் சுருக்கமாக பதிலளித்து புறப்பட்டுச் சென்றார்.



Leave a Reply