ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு – ரஜினிகாந்த், நெல்சன் சென்னை திரும்பினர்

Spread the love

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் படமாக்கப்பட்டன.

இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் விமானம் மூலம் கோவை வந்தடைந்து அங்கிருந்து பாலக்காடு சென்றனர். அங்கு பல்வேறு காட்சிகள் வெற்றிகரமாக படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று இயக்குனர் நெல்சனும், நடிகர் ரஜினிகாந்தும் மீண்டும் சென்னை திரும்பினர். அவர்களை அழைத்து வருவதற்காக கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் “தலைவா” என்று முழங்கிக் கொண்டாடினர்.

ரசிகர்களின் ஆர்வம், வரவேற்பு மற்றும் ஆரவாரத்துடன் ரஜினிகாந்த் விமான நிலையத்தை விட்டு சென்னை பயணமானார். ஜெயிலர் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.