ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு கோவை வந்தார் ரஜினிகாந்த்.

rajinikanth
Spread the love
​சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்திற்கான  படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று அவர் கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாக கூறிய அவர், படப்பிடிப்பு கோவை – கேரளா எல்லை பகுதியில் நடக்கிறது என கூறினார்.  படம் வெளியீடு தேதி எப்போது என்பது பற்றி தெரியவில்லை என கூறினார்.விமான நிலையத்திலிருந்து ரஜினிகாந்த்  காரில் புறப்ப​ட்டார் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்​.