, ,

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச வினா வங்கி புத்தகம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

எஸ்.பி.வேலுமணி
Spread the love

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட மத்வ ராயபுரம் ஊராட்சி, முத்திபாளையம் ஆகிய இடங்களில் ரூ.36 லட்சம் மதிப்பில் பல் நோக்குக் கூடம் கட்டும் பணிக்கும், ரூ.15.00 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கும் பூமி பூஜை செய்தும், கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கத்தையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தொண்டா முத்தூர் பேரூராட்சி முத்திபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து 22-வது ஆண்டாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு இலவச வினா வங்கி புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்.
ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான் என்பதை உணர்ந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை
யொட்டி கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து 10 மற்றும் 12 வகுப்புகள் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வினா வங்கி புத்தகத்தை வழங்கி வருகிறோம். முதலில் குனியமுத்தூர் பகுதியில் மட்டும் இந்த வினா வங்கி புத்தகம்வழங்கினோம். இந்த புத்த
கத்தின் மூலம் பயன்பெற்ற மாணவ, மாணவர்கள் அளித்த வரவேற்பும், அனைத்து பகுதிகளுக்கும் இந்த புத்தகத்தை கொடுக்கவேண்டும் என்று கோரிக்கையையடுத்து இந்த வினா வங்கி புத்தகம் சிறந்த ஆசிரியர் குழுவை கொண்டு தயார்செய்யப்பட்டு தொடர்ந்து கோவை மாவட்டம் முழு
வதும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்தி நன்றாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும்.
அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவும், எடப்பாடியாரும் பள்ளிக் குழந்தைகளுக்கு படிக்கத் தேவையான அனைத்து சலுகைகளை வழங்கி, ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை பயில்வதற்கு அனைத்து விதமான திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
உங்கள் தாய் தந்தையர் உங்களை கஷ்டப்பட்டு, அவர்கள் சாப்பிட்டாலும், சாப்பிடா விட்டாலும் தமது குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். கேட்டதை எல்லாம் தருகிறார்கள். ஆகவே மாணவ மாணவியர் நன்றாக படித்து தேர்வுகளில் மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்றிடவும், உயர்ந்த பதவிகளை பெற்றிடவேண்டும். மேலும் கடவுளுக்கு மேலான ஆசிரியர்களை நீங்கள் மதிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும்.
மாணவ மாணவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆக தேர்வானார்கள், எம்பிபிஎஸ் ஆக வந்தார்கள் எனும் வாய்ப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் எங்களது இந்த கல்வி பணி தொடர்ந்து 22 ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது . இதுதான் இந்த ஊருக்கும் பெருமை, பெற்றோருக்கும் பெருமை. நமது மாவட்டத்திற்கும் பெருமை.
அதே போல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாணவமாணவிகள் வெற்றி பெறும் வகையில் புத்தகங்களும், இலவச பயிற்சிகளும் வழங்கி வருகிறோம். இதனால் பல மாணவர்கள் அரசு அதிகாரிகளாக உருவாகியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக தான் கோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி துவங்கப்பட்டது. பள்ளி படிப்பைமுடிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். ஆகவேண்டும் என்பதே அவர்களின் எண்ணமும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். ஆகவே தான் மாணவ,மாணவிகள் உயர்ந்த பதவிகளை அடையவேண்டும் என்ற நோக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரில் தகுதி வாய்ந்த சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பல்வேறு வசதிகளுடன் அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளில் தேர்வு பெற்று நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, மாவட்ட கழக பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர்கள் டி.பி.வேலுசாமி, ராஜா (எ) ராமமூர்த்தி, டி.சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் டிசி.பிரதீப், ஒன்றிய கவுன்சிலர் மோகன்ராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் கே.எஸ்.சங்கர், ஆடலரசு, சுந்தரராஜன், நல்லறம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.