தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஜெயசூர்யாவின் மரணம் ஆணவக் கொலையாக இருக்கலாம் என கூறி, வழக்கை CBCID விசாரணைக்கு மாற்றும் உத்தரவும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
எம்.முருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அவரது மகன் ஜெயசூர்யா கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கல்லூரியில் B.Com படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவியின் உறவினர்கள், ஜெயசூர்யாவை மிரட்டி, காதலை கைவிடச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர், பரவீன் மற்றும் ஜீவன் என்ற இருவர், ஜெயசூர்யாவை மே 18-ந்தேதி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இரவு 10 மணிக்கு செய்த அழைப்பில், அவர்களுடன் இருப்பதாக கூறியிருந்த ஜெயசூர்யா, பின் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விபத்து நடந்த இடத்தில் இருந்தவராக கூறப்படும் பேராசிரியர் பரமசிவம் சம்பந்தமாக, தொலைவு, நேரம், தகவல் மறைவு உள்ளிட்ட பல முக்கியக் கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, இது சாதாரண விபத்து அல்ல, ஆணவக் கொலை என சந்தேகம் உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பி.வேல்முருகன், “தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. துரதிருஷ்டவசமாக அதற்குப் புலஸ்தம்பம் கிடையாது. உண்மை வெளிப்படாத சூழல்கள் நம்மை வேதனைடைய வைக்கின்றன,” என்று கூறினார்.
இவ்வழக்கை CBCID விசாரணைக்கு மாற்றி, அனைத்து ஆவணங்களையும் 2 வாரத்துக்குள் ஒப்படைக்க குள்ளஞ்சாவடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. CBCID போலீசார் நேர்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தினார்.



Leave a Reply