ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் தலைமையில், வரும் ஜூலை 4ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமையகச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள், வெற்றித் தலைவர் நிகழ்வுகள் மற்றும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள் தொடர்பான திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.

அதனையடுத்து, கழகச் சட்ட விதிகளின்படி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள் (மாவட்டங்களை உள்ளடக்கிய), மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, கழகத் தலைவரின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *