கோவையின் மையப்பகுதியில் வர்த்தகமும் குடியிருப்பும் இணைந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய மனைத்திட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், ‘தி ரெசிடென்சி’ என்ற இந்த புதிய திட்டத்தை சுமார் 16.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.750 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ளது.
ஜி.வி. ரெசிடென்சி அருகே, பீளமேடு மற்றும் ராஜீவ் காந்தி நகரம் உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மனைத்திட்டம், கோயம்புத்தூரில் கனவு இல்லம் அல்லது வர்த்தக கட்டிடம் அமைக்க விரும்புவோருக்கு முக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது.
திட்டத்தின் அறிமுக சலுகையாக சந்தை விலையை விட 30% குறைவாக, ஒரு சென்ட் ரூ.29.9 லட்சமாக நிர்ணயித்திருப்பது முதலீட்டாளர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருந்து சில நிமிடங்களில் சென்றடையக்கூடிய இந்த இடத்தில், தற்போதைய சந்தை நிலவரப்படி நிலத்தின் மதிப்பு விரைவில் இருமடங்காக உயரக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
இதன் துவக்கவிழாவில் பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலா ராமஜெயம் “ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி என்பது வெறும் நிலம் வாங்கும் முதலீடல்ல; கோவையில் மிக முக்கியமான வர்த்தக மற்றும் குடியிருப்பு வளர்ச்சியில் ஒரு பகுதியாக மாறும் வாய்ப்பு. ப்ரீமியம் தரம், சிறந்த விலை மற்றும் உயர்தர திட்டமிடலுடன் கோவையில் புதிய தரத்தை அமைக்கும் மனைத்திட்டமிது” என்று கூறினார்.
பாதுகாப்பான வளாக குடியிருப்பு சூழல், பரந்த உட்புற சாலைகள், நன்கு திட்டமிடப்பட்ட அவென்யூ சாலைகள், உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள், ஸ்மார்ட் பாதுகாப்பு அம்சங்களுடன், எதிர்கால டவுன்ஷிப் முறைப்படி இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வர்த்தக இடங்களையும் இல்லங்களையும் வாஸ்து சாஸ்திரத்துக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வடிவமைத்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் இது வழங்குகிறது.



Leave a Reply