ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிசியோகான் 2025  ஒருநாள் உடலியக்க சிகிச்சை மாநாடு  

Spread the love
உடலியக்க சிகிச்சை (Physiotherapy) துறையின் பங்களிப்பு மற்றும் நவீன முன்னேற்றங்களை வலியுறுத்தும் வகையில், கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் ஒருநாள் உடலியக்க சிகிச்சை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. மருத்துவமனை அரங்கில் நடந்த இந்த மாநாட்டில், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டை ஜி.கே.என்.எம் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள், பேராசிரியர்கள், அனுபவமிக்க உடலியக்க சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“இதய மற்றும் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சையில் உருவாகி வரும் புதிய போக்குகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு, உடலியக்க சிகிச்சை துறையில் சமீபத்திய நவீன முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் குறித்து விரிவாக எடுத்துரைத்தது. ‘பிசியோகான் 2025’ என பெயரிடப்பட்ட இந்த மாநாடு, இந்தியாவில் உடலியக்க சிகிச்சை கல்வி மற்றும் நடைமுறையில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.