ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைபிடிக்கும் வகையில், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண் டறிந்து சிகிச்சையளிப்பதை ஊக்குவிப்பதற்காக ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் இதற்கான உறுதிமொழி ஏற்கவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குமான முகாம் கோவை லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டரில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு மார்ப புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் அனைவரும் இதற்கான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர்.சிவனேசன், ஜி.கே.என்.எம்.மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.ஜி.மனோகரன், மருத்துவ செயல்பாடுகள் இயக்குனர் டாக்டர்.சந்தோஷ், புற்றுநோயியல் துறை மருத்துவர்கள், பணியாளர்கள், செயவிலியர் பயிற்சி மற்றும் அலைடு ஹெல்த் சயின்சஸ் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்ற னர். பொதுமக்களின் நலனுக்காக, ஜி.கே.என்.எம்.மருத்துவமனை அக்டோபர் 9 முதல் 18 வரை பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கண்டறிதல் உள்ளிட்ட இல வச பரிசோதனைகளுக்கான மருத்துவ முகாமை நடத்துகிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிறப்பு மேமோகிராம் பரிசோதனை தொகுப்பு கிடைக்கிறது. இந்த முகாம் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
ஜி.கே.என்.எம். மருத்துவமனை அனைத்து பெண்களுக்கும் உறுதுணையாக இருந்து, விழிப்புணர்வு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் மார்பகப் புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதை ஊக்குவிக்கிறது.
ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்



Leave a Reply